Translate

புதன், 26 அக்டோபர், 2016

தல…அசத்துங்க

டிசம்பர் 31..தங்க சிம்மாசனம்..! ‘தல’ அஜீத்’…!! புருனே அரண்மனை…உலகமே வியக்கும் வரவேற்பு..! இளவரசி.. காத்திருக்கிறார்..!!வீடியோ பாருங்க..!

21/10/2016 08:29

உலகின் பணக்கார நாடு புருனே..! அந்த நாட்டில் மன்னராட்சி நடக்கிறது. மன்னன் மகள் அஜீத் நடித்த வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் கேட்டு அசந்து போய்  தல பற்றி விசாரித்தார்.

அவரது மெய்க்காப்பாளர்கள் தல நடித்த மொத்த படத்தின் டிவிடிக்கள் வாங்கி கொடுத்துள்ளனர். படங்கள் பார்த்த இளவரசி, அஜித்தின் கொள்ளை அழகில் மயங்கிப் போனாராம்.

அவரை விருந்திற்கு அழைக்க ஏற்பாடு செய்வதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.அதற்க்கு’ தல’ தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.ஆனால் இளவரசி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார்.

இப்போது தல புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் சொல்லி விட்டாராம்.

அதற்காக தனி சொகுசு விமானம், ரத்தினக் கம்பள வரவேற்பு..வழி நெடுக தோரணங்கள்  ‘தல’ உட்கார்து விருந்து சாப்பிட தங்க,வைரங்கள் பதித்த சிம்மாசனம் ஆகிய பிரமாண்ட வரவேற்பிற்கு அரண்மனை தயாராகிறதாம்.

உலக கோடீஸ்வரர்கள் இப்போதே அந்த விருந்தில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருகிறார்களாம்..!!

தல…அசத்துங்க..!

வெள்ளி, 9 நவம்பர், 2012

இன்றும் "தல" தல  தான் .

ரஜினிக்கு பிறகு அஜித் பற்றி வரும் தகவல்கள் தான் சுவாரஸ்யமானவை . 

அப்படி ஒரு தகவல்தான் இந்த பதிவு .
                                       ஓய்வு கிடைக்கும்பொது இரவு நேரங்களில் காரை 

எடுத்துக்கொண்டு  நீலாங்கரையிலிருந்து  கிளம்பி வட பழனி வரை ஒரு 

ரவுண்டு அடிப்பது வழக்கம் .சில நாட்களில் வீடு திரும்ப இரவு இரண்டு

 மணிகூட ஆகிவிடுமாம்.  அப்படி ஒரு நாள் நண்பருடன் காரில் கிளம்பி 

இருக்கிறார் அஜித் . இரவு மணி பதினொன்றைத் தொடும்போது தி.நகர் 

ரோகிணி  ஹோட்டல் அருகே வரும்பொழுது கார் நின்று விட்டது .

 உடனே நண்பர் 

இறங்கி காரை தள்ளப் போக , அஜித் அவரை  தடுத்து 'வந்து சீட்டுல 

 உட்கார் நான் தள்ளுகிறேன் ' என்று சொல்ல பதறிப்போன நண்பர் வேறு 

வழியில்லாமல் சீட்டில் உட்கார , ரோகிணி  ஹோட்டலில் இருந்து வாணி 

மஹால் வரை காரை தள்ளிக்கொண்டே வந்து பெட்ரோல் பங்கில் நிறுத்தி 

இருக்கிருக்கிறார் தல .
                                    இன்னொரு சம்பவம்  தல வீட்டில் எப்போதும் சமையல்

 செய்யும் வயதான பெண் அன்றும் கிச்சனில் நுழைந்திருக்கிறார் . நீங்க 

சமைக்க வேண்டாம் ' என்று  சொல்ல , ஸாக்ககாகி  போனார் அந்த பெண் . 

இல்லம்மா இன்னைக்கு மட்டும் நீங்க பேசாமல் உக்காருங்க , உங்களுக்கு 

நான் சமைத்து போடுறேன் ' என்று சொன்னதோடு அவரை டைனிங் டேபிளில் 

உட்காரவைத்து தானே சமைத்து முடித்து  அந்த பெண்ணிற்கு பரிமாறி 

சாப்பிடவைத்து ரசித்திருக்கிறார் நம்ம தல. 


                                                            ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களே ரசிகர் மன்றங்களை கலைக்க 

தயங்கும் போது  அஜீத் தனது

 ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து தமிழ் திரையுலகினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் 

ஆழ்த்தினார் .